உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி மாடர்ன் அகாடமியில்சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்கம்

தி மாடர்ன் அகாடமியில்சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்கம்

தி மாடர்ன் அகாடமியில்சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்கம்நாமக்கல்:நாமக்கல், திருச்சி ரோடு, நா.புதுப்பட்டியில் தி மாடர்ன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே, தி மாடர்ன் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி, வரும், 2025-26ம் கல்வியாண்டு முதல் துவங்கப்பட உள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்க்கை முன்பதிவு நடக்கிறது. விசாலமான அறைகளுடன், தனித்தனி விளையாட்டு மைதானங்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறை, கணினி, ரோபாட்டிக் பயிற்சிக்கான ஆய்வக வசதியுடன் அமைய உள்ளது.ஆந்திரா, பெங்களூரில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட உள்ளனர். விளையாட்டு, போட்டித்தர்வு, நீட், ஜே.இ.இ., பவுன்டேசன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தியுடன் விருப்ப மொழிகளையும் பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியருக்கு, வகுப்பறையில் துணைபுரிய துணைஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளனர்.சிற்றுண்டி, மதிய உணவுடன் அனைத்து இடங்களுக்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 7200200464, 7200200465 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ