உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாக்குமாட்டி துணி வியாபாரி தற்கொலை

துாக்குமாட்டி துணி வியாபாரி தற்கொலை

துாக்குமாட்டி துணி வியாபாரி தற்கொலைநாமக்கல்:நாமக்கல் அடுத்த மணிக்கட்டிபுதுாரை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கோபிநாத், 29; துணி வியாபாரி. இவரது மனைவி நவீனா, 28; இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடால், ஒன்பது மாதங்களுக்கு முன், மனைவி நவீனா, கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.கோபிநாத், கடந்த பிப்., 15ல், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வாடகை கேட்பதற்காக, ரூம் பாய் சென்று கதவை தட்டியுள்ளார். கோபிநாத் கதவை திறக்கவில்லை. அதிர்ச்சியடைந்த ரூம் பாய், கதவை வேகமாக தள்ளியபோது திறந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, சீலிங் பேனில், நயிலான் கயிற்றால் துாக்குமாட்டி, கோபிநாத் இறந்து கிடந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை