உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், சர்வதேச ஓய்வூதியர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர். நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். அதில், ஓய்வூதியர்களுக்கு ஊதியக்குழுவின் பலன்களை மறுக்கின்ற வகையில் மத்திய அரசு நிறைவேற்றிய ஓய்வூதிய சட்ட திருத்த மசோதவை வாபஸ் பெற வேண்டும்.அனைவருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படியை மீண்டும் வழங்க வேண்டும். முதியோருக்கான ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும். எட்டாவது ஊதியக்குழு அமைக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் அழகிரிசாமி, மாவட்ட தலைவர் மணியாரன், மண்டல செயலாளர் காளியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !