உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டிவரும் 21ல் திருச்செங்கோட்டில் துவக்கம்

அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டிவரும் 21ல் திருச்செங்கோட்டில் துவக்கம்

அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டிவரும் 21ல் திருச்செங்கோட்டில் துவக்கம்நாமக்கல்:''அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி, திருச்செங்கோட்டில் வரும், 21ல், தொடங்கி, மூன்று நாள் நடக்கிறது,'' என, தமிழ்நாடு பாராவளி அசோசியேசன் மாநில தலைவர் ராஜன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு பாராவளி அசோசியேஷன் சார்பில், அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன வளாகத்தில், வரும், 21ல் தொடங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டில்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, தெலுங்கானா, உத்தரகண்ட், பீஹார், சிக்கீம், ஹிமாச்சல், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட, 20 மாநிலங்களை சேர்ந்த, 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.துவக்க விழாவில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற, 10க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், நாமக்கல் கலெக்டர் உமா, கல்லுாரி சேர்மன் சீனிவாசன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைக்கின்றனர். 23ல் நடக்கும் இறுதிப்போட்டியை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாநில தலைவர் விக்கிரமராஜா துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்குகிறார். போட்டியில் சிறப்பிடம் பெறும் வீரர்கள், அகில இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி