உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் காரசார விவாதம்

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் காரசார விவாதம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்த பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு, 716.54 மி.மீ., தற்போது வரை, 423.63 மி.மீ., மழை பெறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முடிய இயல்பு மழையளவை விட, 100.12 மி.மீ., அதிகமாக பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை வரை நெல், 602 எக்டர், சிறுதானியங்கள், 24,347 எக்டர், பயறு வகைகள், 4,946 எக்டர், எண்ணெய் வித்துக்கள், 20,925 எக்டர், பருத்தி, 628 எக்டர், கரும்பு, 5,127 எக்டர் என மொத்தம், 56,575 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்-பட்டுள்ளது.அதேபோல், தோட்டக்கலை பயிர்களில் தக்காளி, 293 எக்டர், கத்-திரி, 154 எக்டர், வெண்டை, 131 எக்டர், மிளகாய், 101 எக்டர், மர-வள்ளி, 926 எக்டர், வெங்காயம், 1,353 எக்டர், மஞ்சள், 1,544 எக்டர் மற்றும் வாழை, 1,553 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்-பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ஈஸ்வரன், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து நடந்த விவாதம் பின்வருமாறு:சரவணன் (விவசாயி): மத்திய அரசின் பி.எம்., கிஷான் திட்-டத்தில், சிறு குறு விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்புதுரை, (தலைவர், ராஜ வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம்): ஆறு ஆண்டுகளில், இடும்பன் குளம் நிரம்பி, உபரி நீர் காவிரியில் சென்று கலந்து வீணாகி வருகிறது. அருகில் உள்ள எஸ்.வாழவந்தி ஏரி வறண்டுள்ளது. இந்த உபரி நீரை ஏரியில் நிரப்பினால், 1,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.உமா (கலெக்டர்): நாமக்கல் வறட்சியான மாவட்டம். திருமணி முத்தாறு, கொல்லிமலையில் இருந்து வரும் நீரை நம்பி உள்ளது. அதனால், உபரி நீரை காவிரியில் கலப்பதை தவிர்க்க ஆலோ-சனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.துரைசாமி (விவசாயி): விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதனால், நிலங்-களை விற்று வெளியேறுகின்றனர். இதே நிலை நீடித்தால், 2030ல், விவசாயம் அழிந்து சோற்று பஞ்சம் ஏற்படும். மெய்யானமூர்த்தி (விவசாயி): அரசு திட்டங்கள் கிராமப்புற மக்க-ளுக்கும் சென்றடைய வேண்டும். மானிய விலையில் பெண்க-ளுக்கு, அரசு டிராக்டர் வழங்குகிறது. ஆனால், அவர்களுக்கு, உரிமை தொகை இல்லை. அவர்களுக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.திடீர் தர்ணாவால் பரபரப்புபாலசுப்ரமணியம், (பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்): வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நீர் நிலைகளை மறைத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சிப்காட் திட்டத்திற்கு வரைப்படம் அமைத்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு மனு அளித்தும் பதில் தரமறுக்கின்றனர்.அப்போது, கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., ஆகியோர் மவுனமாக இருந்ததால் அதிர்ச்சி அடைத்த விவசாயிகள், கூட்ட அரங்கில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ