உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் சாலை பணியால் போக்குவரத்தில் மாற்றம்

ராசிபுரத்தில் சாலை பணியால் போக்குவரத்தில் மாற்றம்

ராசிபுரத்தில் சாலை பணியால் போக்குவரத்தில் மாற்றம்ராசிபுரம்:ராசிபுரத்தில், ஒரு வழிப்பாதையில் சாலை அமைக்கும் பணி நடப்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராசிபுரம் நகராட்சியில், ஒரு வழிப்பாதையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலை பணிகள் நடந்து வருவதால், சேலம், ஈரோடு, ஆட்டையாம்பட்டி, திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நகருக்குள் வராமல், தேசிய நெடுஞ்சாலையில் சென்று பழைய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, ராசிபுரம் பைபாஸ் வழியாக சேந்தங்கலம் பிரிவு ரோடு வந்து சேர வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம், 29ம் தேதி வரை நடை முறையில் இருக்கும். எனவே பொதுமக்கள், டிரைவர்கள் இந்த அறிவிப்பின்படி வாகனங்களை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ