உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக தண்ணீர் தினத்தையொட்டிவிழிப்புணர்வு பேரணி

உலக தண்ணீர் தினத்தையொட்டிவிழிப்புணர்வு பேரணி

உலக தண்ணீர் தினத்தையொட்டிவிழிப்புணர்வு பேரணிநாமக்கல்:ஆண்டு தோறும் மார்ச், 22ல், 'உலக தண்ணீர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, உலக தண்ணீர் தினத்தையொட்டி, 'தண்ணீரை பாதுகாப்போம், நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில், மாவட்ட தண்ணீர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி, நாமக்கல்லில் நேற்று நடந்தது.சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் பேரணியை துவக்கி வைத்தார்.நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கி, மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை வழியாக சென்று, உழவர் சந்தை எதிரில் உள்ள காந்தி சிலை அருகில் முடிந்தது.பேரணியில், தண்ணீரை பாதுகாப்பது மற்றும் எவ்வாறு கையாள்வது, பருவ மழை இல்லாத காலங்களில் எவ்வாறு தண்ணீரை சிக்கனமாக சேமிப்பது, தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.சங்க துணைத்தலைவர் கார்த்திக், செயலாளர் கிருஷ்ணசங்கர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி