உணவு இடைவேளையில்அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
உணவு இடைவேளையில்அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்ராசிபுரம்:ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பெரம்பலுார் மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் செல்வம் பேசினார். இதில், பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து கோஷமிட்டனர். மேலும், அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பு, அதிகாரிகளின் அலட்சிய போக்கு, அதிகார வர்க்கமாக திகழும் அதிகாரிகள், ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.