உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் தாக்கி இறந்தகுடும்பத்தினருக்குஎம்.எல்.ஏ., ஆறுதல்

மின்சாரம் தாக்கி இறந்தகுடும்பத்தினருக்குஎம்.எல்.ஏ., ஆறுதல்

மின்சாரம் தாக்கி இறந்தகுடும்பத்தினருக்குஎம்.எல்.ஏ., ஆறுதல் மோகனுார்:மோகனுார் அருகே, மின்சாரம் தாக்கி இறந்த குடும்பத்தினருக்கு நாமக்கல் எம்.எல்.ஏ., ஆறுதல் மற்றும் நிவாரண உதவி வழங்கினார்.மோகனுார் அடுத்த ஆண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி இளஞ்சியம், அவரது பேரக்குழந்தைகள் ஐவிழி மற்றும் சுஜித் ஆகிய மூவரும் வயலில் மின்சாரம் தாக்கி இறந்தனர். அவர்களின் குடும்பத்தினர் செல்வம், பாண்டியராஜன், வைதேகி ஆகியோரை, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து நிவாரண உதவி வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் நவலடி, மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் கைலாசம், மாவட்ட பிரதிநிதி கார்த்தி, கிளைச் செயலாளர்கள் குமரவேல், கணேசன், ராஜாராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ