உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேந்தையில் பலாப்பழம் விற்பனை ஜோர்

சேந்தையில் பலாப்பழம் விற்பனை ஜோர்

சேந்தமங்கலம்நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, மிளகு, அன்னாசி, பலா, வாழை, காபி உள்ளிட்ட வேளாண் பொருட்களும் அதிகளவு கிடைக்கிறது. கொல்லிமலை பலாப்பழம் சிறியதாக இருந்தாலும், சுவை அதிகமாக இருக்கும். இதனால், கொல்லிமலை பலாப்பழம் என்றாலே, சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்வர்.கொல்லிமலை பலாப்பழம் சீசன், வைகாசி மாதம் தொடங்கி ஆடி வரை இருக்கும். இந்த மாதங்களில், பலா அறுவடை அதிகமாக இருக்கும். ஆவணியில், கொல்லிமலை பலாப்பழ சீசன் முடிந்து விடும். அதன்பின், பழம் கிடைக்காது. இந்தாண்டு சில வாரங்களுக்கு முன், பலா அறுவடை தொடங்கி விட்டது. செம்மேடு, சோளக்காடு, முள்ளுக்குறிச்சி மற்றும் பேளுக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் பழங்களை கொண்டு வந்து விற்று வருகின்றனர். தமிழகத்தில் பண்ருட்டிக்கு அடுத்தபடியாக கொல்லிமலையில் தான் அதிகளவில் பலாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கொல்லிமலையில் உற்பத்தியாகும் மூலிகை, காற்று கலந்து வரும் தண்ணீரால் மட்டும் தான் கொல்லிமலை பலா பழத்தின் சுவை தனித்துவமானது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பலாப்பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.மேலும், கொல்லிமலையின் அனைத்து பகுதிகளிலும், 30 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை, பெரிய, சிறிய அளவிலான பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். நாமக்கல், சேலம் மாவட்ட பழ வியாபாரிகள், கொல்லிமலை பலாப்பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பலா பழங்களின் விளைச்சல் அதிகரிக்கும் என்று பலாப்பழம் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள், மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை