உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அதிகாரிகள் கெடுபிடியால் சாயப்பட்டறைக்கு விடுமுறை

அதிகாரிகள் கெடுபிடியால் சாயப்பட்டறைக்கு விடுமுறை

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையத்தில், சமயசங்கிலி, களியனுார், ஆவத்திபாளையம், ஒட்டமெத்தை, பெரியகாடு, நேருநகர், அக்ரஹாரம், ஆண்டிக்காடு, டி.வி.எஸ்., மேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து விதிமீறி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் ஆற்று தண்ணீர் மாசடைகிறது.புதிய ஆட்சி அமைந்தவுடன், சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், நான்கு குழுக்களாக பள்ளிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்து விதிமுறை மீறி செயல்பட்ட, 20 சாய ஆலைகளை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டி, சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். மேலும், சில நாட்களாக, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் இரவு, பகலாக சாய ஆலைகளை சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகளின் தீவிர கெடுபிடியால், நேற்று முதல் பள்ளிப்பாளையத்தில் சாயப்பட்டறைக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனால் சாய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ