உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3 ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்ய 3 நபர் குழு அமைக்கும் முடிவை கைவிட அரசுக்கு கோரிக்கை

3 ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்ய 3 நபர் குழு அமைக்கும் முடிவை கைவிட அரசுக்கு கோரிக்கை

3 ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்ய 3 நபர் குழு அமைக்கும் முடிவை கைவிட அரசுக்கு கோரிக்கைநாமக்கல்:'தமிழக அரசு, மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு, மூன்று நபர் குழு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என, மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் முருக செல்வராசன், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில், மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம், தமிழக இடைநிலை, தொடக்க நிலை ஆசிரியருக்கு, 2006 ஜூன், 1 முதல் வழங்க வேண்டும். நிதி மோசடி திட்டமான புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம், மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை நிராகரித்து, ஆசிரியர், -அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் தொடர்ந்து வழங்க வேண்டும்.ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, 9 மாதகால அவகாசத்தில் பரிந்துரை அறிக்கை அளிப்பதற்கு, மூன்று நபர்குழு அமைக்கும் முடிவை, தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, விடுப்பூதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை, பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.தமிழக ஆசிரியர், -அரசு ஊழியர்களின், 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ- - ஜியோ சார்பில், வரும், 14ல், நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்ட தலைநகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டம், வரும், 25ல், நாமக்கல்லில் நடக்கும் மறியல் போராட்டம் ஆகியவற்றில் முழுமையாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை