உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., கூட்டத்தில் கட்சியினரிடையே கைகலப்பு

தி.மு.க., கூட்டத்தில் கட்சியினரிடையே கைகலப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகர தி.மு.க., சார்பில், சந்தைப்பேட்டை பகு-தியில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து-கொண்டனர்.கூட்டம் முடிந்து, எம்.பி., பிரகாஷ், மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் மேடையில் இருந்து இறங்கி செல்ல முற்பட்-டனர்.அப்போது, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆதரவாளர்கள், நகர செயலாளர் குமார் குறித்து புகார் தெரிவித்-தனர். இதற்கு, குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பிரையும் அமைதியாக இருக்கும்படி, எம்.பி., பிரகாஷ், மாவட்ட செய-லாளர் மதுரா செந்தில் கூறியும், கட்டுப்படுத்த முடியவில்லை.இதுகுறித்து, நகர செயலாளர் குமார் கூறுகையில், ''நகர செய-லாளர் என்ற முறையில், எனக்கு எந்த தகவலும் நகராட்சி தலைவர் தெரிவிப்பதில்லை. தேவையின்றி என் பெயரை களங்-கப்படுத்தி வருகிறார்,'' என்றார்.நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''நகர செயலாளர் செயல்பாடு குறித்து, எம்.பி., மற்றும் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளோம்.ஆய்வுக்குழு வரும் போது தெரிவிக்குமாறு அவர்கள் தெரிவித்-தனர். என் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, கட்சியினரும் புகார் தெரிவித்துள்ளனர்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ