உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் பிறந்தநாள்பொதுக்கூட்டம்

முதல்வர் பிறந்தநாள்பொதுக்கூட்டம்

முதல்வர் பிறந்தநாள்பொதுக்கூட்டம்ப.வேலுார்:கபிலர்மலை ஒன்றிய தி.மு.க., சார்பில், தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சோழசிராமணியில் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் வளர்மதி வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் துாத்துக்குடி சரத்பாலா பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக முதல்வர் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டதுடன், பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டும் இன்றி, உலக அளவில் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேசினார். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி