உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

குமாரபாளையம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் சரவணாதேவி தலைமையில் நடந்தது. பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரும், கணினி அறிவியல் துறை தலைவருமான கார்த்திகேயனி வரவேற்றார். நாமக்கல் மாவட்ட மனநல திட்ட உளவியலாளர் அர்ச்சனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களிடையே பாலின விழிப்புணர்வு, பாலினம் தொடர்பான பிரச்னை, பாலின சமத்துவம், மாணவர் ஒழுக்கம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும், மாணவர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் அதன் எதிர்மறையான விளைவுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும், மாணவர்கள் சமூகவலை தளங்களில் செலவிடும் நேரங்களை குறைத்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுப்பினர் பத்மாவதி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ