உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொ.ம.தே.க., வேட்பாளரை 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்

கொ.ம.தே.க., வேட்பாளரை 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்

நாமக்கல், நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி சார்பில், தேர்தல் பணிமனை திறப்பு விழா, நாமக்கல்லில் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குத்துவிளக்கேற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ''கொ.ம.தே.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி, 10 ஆண்டுகளுக்கு முன் உணர்ச்சி வசப்பட்டு பேசிய கருத்து வைரலானதால், கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நெற்றிக்கண்ணை திறந்து உரிய நேரத்தில், சரியான முடிவை எடுத்து, நல்ல வேட்பாளரை அறிவித்துள்ளார்,'' என்றார்.எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்திற்கு, தி.மு.க., என்ன செய்தது என பட்டியலிட தொடங்கினால், 25 ஆண்டு காலத்திற்கு முன்பும், பின்பும் இந்த சாதனையை எந்த இயக்கத்தாலும் முறியடிக்க முடியாது. கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனை, 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ