நாமகிரிப்பேட்டையில் தி.மு.க., பாக முகவர் கூட்டம்
ராசிபுரம், நவ. 9-நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொ.ஜேடர்பாளையம், தொப்பம்பட்டி, பெருமாகவுண்டம்பாளையம், பச்சுடையாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில், தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் சட்டசபை தேர்தல் பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன் கலந்துகொண்டார். அவர், வரும் சட்டசபை தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்; வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து பேசினார்.சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ராமசுவாமி, தொகுதி பொறுப்பாளர் ஆனந்தபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.