உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா.கம்யூ., மவுன ஊர்வலம்

மா.கம்யூ., மவுன ஊர்வலம்

பள்ளிப்பாளையம்: மா.கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, 72, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த, 12ல் காலமானார். அவ-ரது மறைவிற்கு நாடு முழுவதும், அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, பள்ளிப்பாளையம் பகுதியில் மா.கம்யூ., கட்சி சார்பில், ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் மவுன் ஊர்வலம், நேற்று நடந்தது. இந்த ஊர்வலம், பள்ளிப்பா-ளையம் ஆவாரங்காடு பகுதியில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகு-தியில் முடிந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், அசோகன், ம.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை