மேலும் செய்திகள்
கன மழைக்கு நல்லுார் ஏரி நிரம்பியது
12-Aug-2024
எருமப்பட்டி: வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், துாசூர் ஏரியில் உள்ள காய்ந்த கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. எருமப்பட்டி யூனியன், துாசூரில், 250 ஏக்கர் பரப்பளவில் மிகப்-பெரிய ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழை, காற்-றாற்று வெள்ளமாக மாறி, பழையபாளைம் ஏரிக்கு வந்தடைகி-றது. அங்கு நிரம்பி வழியும் தண்ணீர், துாசூர் ஏரியில் கலக்கும்-படி நீர் வழிப்பாதை உள்ளது. இந் நிலையில், கடந்த, மூன்றாண்-டாக கொல்லிமலையில் கன மழை பெய்ததால் ஏரி நிரம்பியது. இந்தாண்டு போதிய மழை இல்லாததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்தது.ஆனால், இந்த ஏரியில் நாமக்கல் மாநகராட்சி கழிவுநீர் முற்றிலும் கலந்து வருவதால், ஏரியில் தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும், இந்த ஏரியில் கடந்த, மூன்றாண்டாக தண்ணீர் இருந்ததால் ஏரியில் ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் காய்ந்துள்ளன. எனவே, தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கும் முன், ஏரியில் உள்ள காய்ந்த கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
12-Aug-2024