உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ்ப்புலிகள் கட்சிஆலோசனை கூட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சிஆலோசனை கூட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சிஆலோசனை கூட்டம்நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார். தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் வரும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, தமிழ்ப்புலிகள் கட்சி ஆதரவு அளிக்கும். வரும், 5ல் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை, பா.ஜ., - நா.த.க., புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன.அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கூறுவது, தமிழக அரசை, மக்களை புறக்கணிக்கும் கொடும் செயல். அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ