உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 106 கிலோ பட்டுக்கூடு விற்பனை

106 கிலோ பட்டுக்கூடு விற்பனை

ராசிபுரம், ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 106 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 600 ரூபாய், குறைந்தபட்சம், 575 ரூபாய், சராசரி, 582 ரூபாய் என, 106 கிலோ பட்டுக்கூடு, 52,000 ரூபாய்க்கு விற்பனையானது.பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளிபிளஸ் 2 தேர்வில் சாதனைப.வேலுார், மே 10பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். மாணவி வர்ணிகா, 600-க்கு, 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ரித்திஷ்குமார், 600-க்கு, 585 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவியர் நிஷிகா, ஹாசினி ஆகியோர், 600-க்கு, 584 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்துள்ளனர். 25 மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.கணினி அறிவியலில், 18 பேர், கணிதம், 3, உயிரியல், 2, பொருளாதாரம், 1, கணக்குப்பதிவியல், 1 மாணவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனைபுரிந்துள்ளனர். தேர்வெழுதிய, 194 மாணவர்களில், 590-க்கு மேல், ஒருவர், 580-க்கு மேல், எட்டு பேர், 570-க்கு மேல், 15 பேர், 350-க்கு மேல், 45 பேர், 500-க்கு மேல், 110 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசீலா, துணை செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வர் ராஜசேகரன், இயக்குனர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !