உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காதல் திருமணத்தால் வாலிபரின் தந்தையை தாக்கிய 2 பேர் கைது

காதல் திருமணத்தால் வாலிபரின் தந்தையை தாக்கிய 2 பேர் கைது

சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், குண்டனி நாடு பஞ்., குண்டனி கஸ்பா கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 50; இவருக்கு கமலா என்ற மனைவியும், இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், ஆலாந்துார் நாடு பஞ்., நடுவளவு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சவுந்திர பாண்டியன், 23, என்ற வாலிபர், சீனிவாசன் மகள் மோனிசாவை கடந்த, 16ல் தம்மம்பட்டி சிவன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவத்தால், இரு குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.இந்நிலையில், நெல் அரைப்பதற்காக ஆவேரிப்பட்டிக்கு செல்வம் சென்றார். பின், வேலை முடிந்து நடுவலவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த சீனிவாசன், மோகன், விக்னேஷ் ஆகியோர், செல்வத்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகார்படி, செங்கரை போலீசார், மோகன், விக்னேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ