உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயி வீட்டில் நகை திருட்டு மோகனுார் அருகே 2 பேர் கைது

விவசாயி வீட்டில் நகை திருட்டு மோகனுார் அருகே 2 பேர் கைது

மோகனுார்: மோகனுார் தாலுகா, அரூர் பஞ்., ஆலம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 74; கூலித்தொழிலாளி. இவரது வீட்டில், வெள்ளி குத்துவிளக்கு, தங்க தோடு, தங்க காசு, செயின் உள்பட, இரண்டே கால் பவுன் திருட்டு போனது. இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நி-லையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, அரூர் பகுதியில் சந்தே-கப்படும் வகையில், நின்றிருந்த, இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 34, நாமக்கல்லை சேர்ந்த அருண்குமார், 28, என்பதும், ஆலம்பட்டி முருகேசன் வீட்டில் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், நகைகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை