உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.22.20 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ.22.20 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று ரூ.22.20 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம் நடந்தது.ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர். கடந்த வாரம் நடந்த சந்தையில், 17 ஆயிரத்து, 612 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். மொத்தமாக, 21 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 18 ஆயிரத்து, 200 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 125.62 ரூபாய், குறைந்தபட்சமாக, 119.89 ரூபாய், சராசரியாக, 124.19 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 22 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை