உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 2,407 குற்றங்களில் ரூ.14.75 கோடி மோசடி

2,407 குற்றங்களில் ரூ.14.75 கோடி மோசடி

நாமக்கல்:''நாமக்கல் மாவட்டத்தில், 15 மாதங்களில், 2,407 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 14.75 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது,'' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, இரட்டை பணம், டாஸ்கை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட வழிகளில் சைபர் குற்றங்கள் அரங்கேறுகின்றன. இதுபோன்ற வழிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக, '1930' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், இழந்த பணம் அல்லது பொருளை பிளாக் செய்து நிறுத்தி வைக்க முடியும்.பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால், போலீஸ் ஸ்டேஷன் வருவதற்கு முன், '1930' என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மொபைல் திருட்டு நடந்தால், www.ceir.gov.inஎன்ற இணையதளத்தில் எண்ணை கொடுத்தால் உடனடியாக மொபைலை லாக் செய்துவிட முடியும்.நாமக்கல் மாவட்டத்தில், 2024ல், 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 14.75 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 85 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதுபோல, இந்தாண்டில் இதுவரை, 500 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, நாளொன்றுக்கு, ஐந்து சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ