உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 310 பஞ்.,ல் 29ல் கிராம சபை

310 பஞ்.,ல் 29ல் கிராம சபை

310 பஞ்.,ல் 29ல் கிராம சபைநாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 310 கிராம பஞ்சாயத்துகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கடந்த, 22ல் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டம், வரும், 29 காலை, 11:00 மணிக்கு, மாவட்டத்தில் உள்ள, 310 கிராம பஞ்சாயத்துகளில் நடக்கிறது. கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கிராம பஞ்., தணிக்கை அறிக்கை வெளியிட வேண்டும். சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், கூட்டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை