உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 5 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

5 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

நாமக்கல் :நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, வெண்ணந்துார் யூனியன், பொன்பரப்பிப்பட்டி, ராசிபுரம் யூனியன், கூனவேலம்பட்டி, புதுச்சத்திரம் யூனியன், தாத்தையங்கார்பட்டி, காரைக்குறிச்சி, அக்கியம்பட்டி ஆகிய பகுதிகளில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் திறப்பு விழா, நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.எம்.பி., ராஜேஸ்குமார், பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்துவைத்தும், 15 பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கினார்.அட்மா குழு தலைவர்கள் துரைசாமி, ஜெகன்நாதன், ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணை பதிவாளர் சண்முகநதி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி