57வது தேசிய நுாலக வார விழா கொண்டாட்டம்
ப.வேலுார், நவ. 19--ப.வேலுார், பள்ளி சாலையில், பொது நுாலகம் உள்ளது. 60,000 புத்தகங்கள் உள்ள இந்த நுாலகத்திற்கு, தினசரி, 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு, 57வது தேசிய நுாலக வார விழா, நேற்று கொண்டாடப்பட்டது. நுாலகர் சாந்தி தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், ''இங்கு படிக்க வரும் மாணவ, மாணவியர், நுாலகத்தை பயன்படுத்தி அரசு உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும்,'' என, வாழ்த்தினார். தொடர்ந்து, வாசகர்களுக்கு கழிப்பிட வசதி ஏற்பாடு செய்து கொடுத்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். விரைவில் நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்டி, 60,000 புத்தகங்களை பாதுகாக்க வேண்டும் என, அனைவரையும் கேட்டுக்கொண்டார். முன்னதாக, வ.உ.சிதம்பரனார் பிள்ளை உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 50-க்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர்.