உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாராபுரம் வழக்கறிஞர் கொலையில் நாமக்கல்லை சேர்ந்த 6 பேர் கைது

தாராபுரம் வழக்கறிஞர் கொலையில் நாமக்கல்லை சேர்ந்த 6 பேர் கைது

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற மாற்றுத்திறனாளி வக்கீல் முருகானந்தம், 41; கடந்த மாதம், 28ல் சித்தப்பா தண்டபாணி உள்ளிட்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தண்டபாணி உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.போலீசார் இவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்த நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் நேற்று சென்றனர். தனி பங்களாவில் பதுங்கியிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த பாலமுருகன், 44, சதீஷ்குமார், 44, சசிகுமார், 33, சுதர்சன், 40, அண்ணாதுரை, 36, முருகானந்தம், 50 என தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்து, தாராபுரம் குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். ஆறு பேரையும் வரும், ௧௨ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி