உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் 3 நாளில் அதிரடி 65 வழக்குகள் பதிந்து 71 பேர் கைது

மாவட்டத்தில் 3 நாளில் அதிரடி 65 வழக்குகள் பதிந்து 71 பேர் கைது

நாமக்கல்,: நாமக்கல் மாவட்டம் முழுவதும், மூன்று நாட்களில் நடத்திய சோதனையில், 65 வழக்குகள் பதிவு செய்து, 71 பேர் கைது செய்-யப்பட்டுள்ளனர்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை தயாரிப்புகள், சாராயம் காய்ச்சுதல், லாட்டரி விற்பனை, கள்ளச்-சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்தல், சட்டம் ஒழுங்கு தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் வகையில், கடந்த, 28 முதல், மூன்று நாட்கள் சிறப்பு சோதனை மற்றும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.இந்த மூன்று நாட்களில், பொதுமக்களிடம் அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தொடர்பாக, ஆறு பேர் மீது, ஆறு வழக்குகள், கஞ்சா விற்பனை செய்த, 17 பேர் மீது, 11 வழக்-குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட, ஆறு பேர் மீது, ஆறு வழக்குகள், லாட்-டரி விற்பனை செய்த, 15 பேர் மீது, 15 வழக்குகள், கள்ளச்சந்-தையில் அரசு மதுபானம் விற்பனை செய்த, 27 பேர் மீது, 27 வழக்குகள் என, மொத்தம், 71 பேர் மீது, 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 'நாமக்கல் மாவட்டத்தில், இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரா-வது ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்-படும்' என, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்-துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி