பூஞ்சான், அசுவினி தாக்கத்தால் 75 சதவீதம் தென்னை பாதிப்பு
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''தமிழக முதல்வர் ஸ்டாலின், விவ-சாயிகளின் கோரிக்கையை ஏற்று, மோகனுாரில் செயல்பட்டு வந்த, 'சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை' பெயரை, 'மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை' என மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளார்,'' என்றார். அதை தொடர்ந்து நடந்த விவாதம்:* பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர், விவசாயிகள் முன்னேற்-றக்கழகம்:நாமக்கல் மாவட்டத்தில், தென்னை மரத்தில், கருப்பு பூஞ்சான், வெள்ளை அசுவினி தாக்கம், 75 சதவீதம் உள்ளது. அவற்றை கட்-டுப்படுத்த, வேளாண் விஞ்ஞானிகளை வரவழைத்து உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். 2011-12ல், மோகனுார் தாலுகா, வளை-யப்பட்டியில், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மூலம், தடுப்-பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையை கண்டுபிடித்து தர வேண்டும்.* ராஜேந்திரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பால் உற்பத்தியா-ளர்கள் நலச்சங்கம்: மரவள்ளிக்கிழங்கிற்கு ஆதார விலை நிர்-ணயம் செய்ய வேண்டும். கடந்தாண்டு, 17,000 ஹெக்டேரில் மர-வள்ளி சாகுபடி செய்யப்பட்டது. அப்போது, ஒரு மூட்டை கிழங்கு, 600-700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்-போது, அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், ஒரு மூட்டை கிழங்கு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால், சேகோவிற்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே, மர-வள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகளை காப்பாற்ற முடியும்.இவ்வாறு விவாதம் நடந்தது.