உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி அரசு பள்ளி மாணவர்கள் 90 பேர் பங்கேற்பு

மாவட்ட பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி அரசு பள்ளி மாணவர்கள் 90 பேர் பங்கேற்பு

நாமக்கல், மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டியில், 90 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த, 17ல், வட்டார அளவில் போட்டி நடத்தப்பட்டது. அதில், ஒரு போட்டிக்கு, ஒரு மாணவர், ஒரு மாணவி என, இரண்டு பேர் வீதம், 15 வட்டாரங்களில் இருந்தும், 90 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்று, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இறுதியில், ஒவ்வொரு போட்டியிலும், தலா ஒரு மாணவ, மாணவி என, மொத்தம், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'அவர்கள், பின்னர் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்' என, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி