உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மருத்துவமனையில் புகுந்த கொம்பேறி மூக்கன் மீட்பு

மருத்துவமனையில் புகுந்த கொம்பேறி மூக்கன் மீட்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும், 500க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.நேற்று காலை, 11:00 மணிக்கு, உள்நோயாளி பிரிவில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வெப்படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பதுங்கியிருந்த, 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் பிடித்து, ஆளில்லாத காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை