உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

குமாரபாளையம்: 'குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை, வரும், 4 முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது' என, கல்லுாரி முதல்வர் (பொ) சரவணாதேவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:குமாரபாளையம் அரசு கலை கல்லுாரியில், 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பின்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு, இன்று நடக்கிறது. வரும், 4ல் தரவரிசைப்படி பொது கலந்தாய்வு நடக்கிறது. ஜூன், 4ல், 400 முதல், 250 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தமிழில், 100 மதிப்பெண் பெற்றவர்கள் முதல், 80 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், ஆங்கிலத்தில், 100 மதிப்பெண் பெற்றவர்கள் முதல், 60 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், கலந்தாய்வு நடக்கிறது. இதேபோல், 5ல், 279 முதல், 170 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தமிழில், 79 மதிப்பெண் பெற்றவர்கள் முதல், 60 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், ஆங்கிலத்தில், 59 மதிப்பெண் பெற்றவர்கள் முதல், 48 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும்; 6ல், 170 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றவர்களுக்கும், தமிழில், 60 மதிப்பெண்ணுக்கு கீழே பெற்றவர்களுக்கும், ஆங்கிலத்தில், 48 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !