மேலும் செய்திகள்
'ஆள் பற்றாக்குறைக்கு இயந்திரமயமாக்கலே தீர்வு'
31-Aug-2024
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், நேற்று காலை, விவசாய கருவிகளுக்கான கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சி, நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இக்கண்காட்சி அரங்குகளில், அனைத்து விதமான விவசாய இயந்திரங்கள், நீர் சிக்கனம், குறைந்த வேலையாட்கள், விரைவாக பயிர் முதிர்ச்சி, ஆற்றல் மற்றும் மின்சார சேமிப்பு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு, அதிக மகசூல், அதிகபட்ச நிகர வருமானம் தரக்கூடிய புதிய முறையிலான சொட்டுநீர் பாசன அரங்குகள், வீரிய ஒட்டு ரக கொய்யா, பர்மா தேக்கு, செம்மர கன்றுகள் அரங்குகள் விவசாயம் மற்றும் கால்நடை பண்ணை கருவிகள், தீவனம் வெட்டும் இயந்திரத்திற்கான அரங்குகள், புது விதமான பால் கறவை இயந்திரங்களுக்கான அரங்குகள், கலை வெட்டும் கருவிகள், உரம் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் ஆர்வத்துடன் அரங்குகளை பார்வையிட்டனர்.
31-Aug-2024