இளம் சாதனையாளருக்கு கல்வி உதவித்தொகை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல்: 'இளம் சாதனையாளர் களுக்கு, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்-தொகை இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்றப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொரு-ளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. 2025-26ம் ஆண்டிற்கு, தேசிய கல்வி உத-வித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு, 2.50 லட்சம் ரூபாய். இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் விண்ணப்பிக்க வரும், 15 கடைசி நாள்.கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, வரும், 31க்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை இணையத-ளத்தில் பதிவுசெய்து, 2025-26ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்து பயன்பெறலாம். நடப்பாண்டில் புதிதாக விண்ணப்-பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், பட்டியலிடப்-பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், தங்களது மொபைல் எண், ஆதார் விபரங்களை பதிவு செய்து, மொபைல் போனிற்கு வரும் ஓ.டி.ஆர்., நெம்பரை பயன்படுத்தி, 2025-26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.