உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட நீதிமன்றங்களில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

மாவட்ட நீதிமன்றங்களில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நாமக்கல், டிச. 24-நெல்லை நீதிமன்ற வளாகத்தில், மாயாண்டி என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து, டி.ஜி.பி., சங்கர்ஜிவால் அனைத்து நீதிமன்றங்களிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில், இரண்டு எஸ்.ஐ., உள்பட, 6 பேரும், மற்ற நீதிமன்றங்களில், இரண்டு எஸ்.ஐ., உள்பட, 5 போலீசாரும் பணியில் ஈடுபட உள்ளனர்.'நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நேற்று முதல், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடங்கியது. இருந்தும், நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால், சிறிது நேரம் மட்டுமே அவர்கள் பணியில் ஈடுபட்டனர். இன்று (டிச., 24) முதல், அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ