மேலும் செய்திகள்
சாலையில் மட்டையாகிஜோடியாக கிடந்த குடிமகன்கள்
14-Feb-2025
ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
05-Feb-2025
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதி யில், வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் குடிநீர் குழாய் மீட்டர் திருடிய, இரவு நேர திருடனை போலீசார் கைது செய்தனர்.பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் திருடப்பட்டு வந்தது. குடிநீர் மீட்டரை, இரும்பு கடையில் போட்டால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், குறி வைத்தே மீட்டர் திருடப்பட்டது. 100க்கும் மேற்பட்ட குடிநீர் மீட்டர் திருட்டு போயுள்ளது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு ராஜ்வீதி பகுதியில் குடிநீர் மீட்டர் திருட்டு போனது.இதையடுத்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது, நள்ளிரவில் டிப்டாப் வாலிபர் ஒருவர், தலையில் குல்லா அணிந்து, கையில் டார்ச் லைட், ஸ்க்ரூ டிரைவருடன் வந்து, குடிநீர் குழாயில் இருந்த மீட்டரை திருடி விட்டு செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த நவீன்ராஜ், 33, என தெரியவந்தது. நேற்று பள்ளிப்பாளையம் போலீசார் நவீன்ராஜை கைது செய்து, இவரிடம் இருந்து, 67 குடிநீர் மீட்டரை பறிமுதல் செய்தனர்.
14-Feb-2025
05-Feb-2025