மேலும் செய்திகள்
சாலை விபத்தில் ஏட்டு பலி
24-Apr-2025
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், 'நெகிழி' பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று, 'நெகிழி' பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதன் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பி.டி.ஓ., பாலவிநாயகம் தலைமையில், முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்-பட்டது. தொடர்ந்து, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தடை செய்யப்-பட்ட, 'நெகிழி' பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என உறு-திமொழி எடுத்துக்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், பஞ்., செயலாளர்கள், துாய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து-கொண்டனர்.
24-Apr-2025