நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நாமக்கல்: நாமக்கல் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் கிடங்கு ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள், அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த கிடங்கிற்கு கமிஷனர், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சென்று, 100 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கி வைத்திருந்த கவுதமன் என்பவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.