பேவர் பிளாக் நடைபாதை அரசு பள்ளியில் பூமி பூஜை
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளியப்பன், மேலாண்மை குழு தலைவர் வணிதா உள்பட பலர் உடனிருந்தனர்.