உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரப்பளீஸ்வரர் கோவில் வளாகத்தில் தற்காலிக கடை அமைக்க இன்று ஏலம்

அரப்பளீஸ்வரர் கோவில் வளாகத்தில் தற்காலிக கடை அமைக்க இன்று ஏலம்

சேந்தமங்கலம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கொல்லிமலை அரப்பளீஸ்-வரர் கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்க, இன்று ஏலம் நடக்கிறது. கொல்லிமலைக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெ-ருக்கு விழா அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அரப்பளீஸ்வரர் கோவிலில் சுவாமி தரி-சனம் ‍செய்ய வருவது வழக்கம். இதனால், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில், கடைகளை அமைக்க ஹிந்து சமய அறநிலையத்-துறை சார்பில், ஒரு மாதத்திற்கான வாடகை வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்தாண்டு கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள், கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங் ஆகியவை அமைக்க முதன் முதலாக ஏலம் விடும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏலம், இன்று, 12:00 மணிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை