உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தவறான கருத்து பதிவிட்டதாக பா.ஜ., பிரமுகர் கைது: கண்டனம்

தவறான கருத்து பதிவிட்டதாக பா.ஜ., பிரமுகர் கைது: கண்டனம்

நாமக்கல், 'சமூக வலைதளத்தில் தவறான கருத்தை பதிவிட்டதாக, பா.ஜ., பிரமுகர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., இளைஞரணி நிர்வாகியாக பிரவீன்ராஜ் பணியாற்றி வருகிறார். இவர், இரண்டு மாதங்களுக்கு முன், 'எக்ஸ்' தளத்தில், ஒரு மதத்தை குறித்து தவறாக தகவல் பதிவிட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து பிரவீன்ராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து முன் ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில், போலீசார் அவருக்கு எவ்வித வாரண்டும் அனுப்பாமல், திடீரென கைது செய்து அவரது வீட்டில் இருந்த பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரவீன்ராஜ் கைது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., வக்கீல் அணியும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி