உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ் டிரைவர் மயக்கம் 20 பயணியர் தப்பினர்

பஸ் டிரைவர் மயக்கம் 20 பயணியர் தப்பினர்

கெங்கவல்லி, ஆத்துார் அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து, அரசு டவுன் பஸ்(தடம் எண்: 7) இயக்கப்படுகிறது. நேற்று காலை, 10:45 மணிக்கு, தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் புறப்பட்டது. ஆணையாம்பட்டியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ், 56, ஓட்டினார். 11:30 மணிக்கு, தகரப்புதுார் பஸ் ஸ்டாப்புக்கு வந்தபோது, டிரைவருக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டது.சுதாரித்த டிரைவர், பஸ்சை ஓட்டிச்சென்று, கூடமலை ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிறுத்தினார். தொடர்ந்து சிகிச்சைக்கு சென்றார். மருத்துவர் பரிசோதனையில், சர்க்கரை அளவு அதிகமானது தெரிந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமான நிலையிலும், பஸ்சை சாமர்த்தியமாக ஓட்டி வந்து நிறுத்தியதால், 20 பயணியர் தப்பினர். பின் பயணியர், வேறு பஸ் மூலம் அனுப்பப்பட்டனர். மாற்று டிரைவர் வரவழைத்து, அந்த பஸ், பணிமனைக்கு ஓட்டிச்செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ