உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை பொருள் விற்றவர் மீது வழக்கு

புகையிலை பொருள் விற்றவர் மீது வழக்கு

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், செல்லிபாளையம் தேவராயபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 51; இவர், அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, எருமப்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், செந்தில்குமார் என்பவரின் பெட்டிக்கடையில், 20 பாக்கெட் ஹான்ஸ் பாக்கெட்டுகள், ‍ஜெயராமன் என்பவரது பெட்டிக்கடையில், 13 பாக்கெட் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி