மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
18-Oct-2024
VTV Ganesh கலாய் Speech at Brother Press Meet
28-Oct-2024
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:மோகனுார் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட ராசிபாளையம் கிராமத்தில், 7 மாடுகள் இறந்தன. இதையடுத்து, ராசிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை சிகிச்சை முகாம், கீழ்கண்ட நாட்களில் நடக்கிறது. அதன்படி, 11ல் ராசிபாளையம் கிராமம், 12ல் ஒருவந்துார் குமரிப்பாளையம், 13ல் பனைமரத்துப்பட்டி, 14ல் சீத்தப்பட்டி, 15ல் சின்னத்தம்பிபாளையம், 16ல் மாமரத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.திருச்செங்கோடு ஒன்றியம், தோக்கவாடி கிராமத்திற்குட்பட்ட தோக்கவாடியில் எல்.எஸ்.டி., நோய் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கீழ்கண்ட கிராமங்களில் மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. அதன்படி, 11ல் தோக்கவாடி, 12ல் பழையபாளையம், 13ல் தச்சன்காட்டுப்பாளையம், 14ல் ஆனங்கூர் செரமிட்டாம்பாளையம், 15ல் முப்பாட்டம்பாளையம், 16ல் கீழேரிப்பட்டி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. கால்நடை வளர்ப்போர், இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-Oct-2024
28-Oct-2024