உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தனியார் அரிசி ஆலையில் மத்திய குழுவினர் ஆய்வு

தனியார் அரிசி ஆலையில் மத்திய குழுவினர் ஆய்வு

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசு மற்றும் சத்து மாவு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பொது வினியோகம் திட்டத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.தற்போது, டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்கொள்முதல் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடர்பான அனுமதிக்காக காத்திருப்பதாகவும், மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.இதையடுத்து, நேற்று நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் மத்தியக்குழுவினர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் என, 10க்கும் மேற்பட்ட அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இம்மாதம் பொது வினியோக திட்டத்திற்கு எவ்வளவு அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; செறிவூட்டப்பட்ட அரிசி எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.புதுச்சத்திரம் பகுதியில் உள்ள ஆலையில் ஆய்வை முடித்துவிட்டு, திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஆலையிலும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி