உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சென்னை - போடிநாயக்கனுார் செல்லும் ரயில் நாமக்கல்லில் நிறுத்தம்: பயணியர் சங்கம் நன்றி

சென்னை - போடிநாயக்கனுார் செல்லும் ரயில் நாமக்கல்லில் நிறுத்தம்: பயணியர் சங்கம் நன்றி

ராசிபுரம், டிச. 18-சென்னை - போடிநாயக்கனுார் செல்லும் பயணிகள் ரயில், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்த ஆணை வழங்கிய அதிகாரிக்கு, நாமக்கல் ரயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, உடுமலைப்பேட்டை, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடிநாயக்கனுார் வரை சூப்பர் பாஸ்ட் ரயில்கள், 20601, 20602 சென்று வருகின்றன. இந்த ரயில்கள், நாமக்கல்லில் நிற்காமல் சென்றன. இதையடுத்து நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், போடிநாயக்கனுார் வரை செல்லும் ரயில்கள், நாமக்கல் சந்திப்பிலும் நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து, போடிநாயக்கனுார் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஜன., 1ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதையடுத்து நாமக்கல் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தலைவர் சுப்ரமணி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக காரைக்கால் வரை, இருமார்க்கமாக புதிதாக ரயில் வண்டியை இயக்க கோரியும், பாலக்காடு முதல்- ஈரோடு வரை சென்றுவரும் ரயிலை கரூர், நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிப்பு செய்யும்படி கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ