தேங்காய் பருப்பு ஏலம் புறக்கணிப்பு
'ப.வேலுார், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தைக்கு, நேற்று விவசாயிகள் தேங்காய் பருப்பை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றிற்கு உரிய தொகையை வியாபாரிகளுக்கு, ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்காத வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காமல் கொள்முதல் பணியை புறக்கணித்தனர் இதனால் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.