உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ. 22 லட்சத்தில் நுாலகம் கலெக்டர் நேரில் ஆய்வு

ரூ. 22 லட்சத்தில் நுாலகம் கலெக்டர் நேரில் ஆய்வு

நாமக்கல், ஜன. 3-பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காடச்சநல்லுார், கொக்கராயன்பேட்டை மற்றும் ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் உமா நேற்று ஆய்வு செய்தார். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காடச்சநல்லுார் ஊராட்சியில், 78 லட்சம் ரூபாய் மதிப்பில் மல்லியக்கரை-ஈரோடு சாலை முதல், பாப்பம்பாளையம் வரை தார் சாலை பலப்படுத்தப்பட்டுள்ளதையும், சாலை ஓரத்தில் செடிகள், புதர்கள் நீக்குதல், மழைநீர் மண் அரிப்புகளை சரிசெய்தல், வடிகால் பராமரித்தல், சிறுபாலங்கள் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். மேலும், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து, அன்னை சத்யா நகரில் பூங்கா அமைக்கும் பணியை பார்வையிட்டதுடன், அங்குள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கொக்கராயன்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை விபரம், அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, ரத்த மாதிரி பரிசோதனை விபரம் குறித்து கேட்டறிந்தார்.பின், 22 லட்சம் மதிப்பீட்டில் கொக்கராயன்பேட்டையில் புதிய நுாலகம் கட்டும் பணி நடந்து வருவதை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ